சிவில் சர்வீசஸ் தேர்வு: வயது சான்றிதழ் கட்டாயம்
சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே, வயது மற்றும் இடஒதுக்கீடு கோரிக்கை தொடர்பான சான்றிதழ்களை தாக்கல் செய்ய வேண்டும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற பின், வயது, இடஒதுக்கீடு கோரிக்கை தொடர்பான சான்றிதழ்களை தாக்கல் செய்யும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது. முன்னாள் பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா கேத்கர் என்பவர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை முறைகேடாக பெற்றதாக சமீபத்தில் சர்ச்சை ஏற்பட்டது.
இது, தேசிய அளவில் பரபரப்பை உண்டாக்கியது. இதை தொடர்ந்து, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான சான்றிதழ் சமர்ப்பிப்பில் மத்திய அரசு மாற்றங்களை அறிவித்துள்ளது.
இதன்படி, முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே, வயது மற்றும் இடஒதுக்கீடு கோரிக்கை தொடர்பான சான்றிதழ்களை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.