“அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்”
– முதலமைச்சர் பதிவு!
அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம் என உரக்கச் சொல்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம் என உரக்கச் சொல்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்,
“தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் 22,931 Smart Classroom அமைக்கும் பணியைக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைத்தேன்.
அந்தப் பணி, இன்று சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசுப் பள்ளியில் நிறைவுபெற்றிருப்பதை அமைச்சர் அன்பில் மகேஸ் தொலைபேசியில் என்னிடம் தெரிவித்தார்.
நவீனமயமான தொடக்கப் பள்ளிகள், நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் நம் மாணவர்கள் இடம்பெற உதவும் Model Schools எனப் பள்ளிக்கல்வித் துறை படைத்து வரும் சாதனைகளால் மகிழ்கிறேன்!
அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம் என உரக்கச் சொல்வோம்!” என்று தெரிவித்தார்.
முன்னதாக இன்று சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையினை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்துவைத்தார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பதிவில்,
“அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல.
அது பெருமையின் அடையாளம்” என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின்.
தொழில்நுட்ப வளர்ச்சியை வகுப்பறைக்குள்ளும் கொண்டு செல்லும் முயற்சியாக, நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்பத்துடன் கூடிய கற்றல் சூழலை உருவாக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கும் பணியை 14.06.2024 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
بحث هذه المدونة الإلكترونية
الاثنين، يناير 27، 2025
Comments:0
Home
Chief Minister M.K.Stalin
Government School
“அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்” - முதலமைச்சர் பதிவு!
“அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்” - முதலமைச்சர் பதிவு!
Tags
# Chief Minister M.K.Stalin
# Government School
Government School
التسميات:
Chief Minister M.K.Stalin,
Government School
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.