“கொன்னு களையும் சாரே..” - அரசு பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்!
வௌவௌத்துப் போன தலைமை ஆசிரியர் என்ன நடக்கிறது என்பது புரியாமல் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். கேரள மாநிலத்தில் பள்ளிக்குள் செல்போன் பயன்படுத்திய மாணவனிடம் இருந்து செல்போனை பறித்த தலைமை ஆசிரியருக்கு மாணவர் பகிரங்கமாக கோலை மிரட்டல் விடுத்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு அனக்கரா பகுதியில் செயல்பட்டு வந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவன் ஒருவர் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். அந்த பள்ளிக்குள் மாணவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. பள்ளிக்கூடம் என்றால் அப்படித்தான் இருக்கும் அதையெல்லாம் மதிக்க வேண்டுமா? என்ற நினைப்பில் இருந்த அந்த மாணவர் செல்போனை தவ்லத்தாக கொண்டு சென்று வந்துள்ளார்.
இதனை கவனித்த வகுப்பாசிரியர்கள், அந்த மாணவனை செல்போன் கொண்டுவரக்கூடாது என்று அறிவுறுத்தி எச்சரித்துள்ளனர். அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாத அந்த மாணவர் செல்போனை பள்ளிக்கு வகுப்பறையில் பயன்படுத்தியபடி இருந்திருக்கிறார். சம்பவத்தன்று அந்த மாணவர் வகுப்பறையில் பாடத்தை கவனிக்காமல் செல்போனை பார்த்தபடி சிரித்துக் கொண்டிருந்தார். அதனைப் பார்த்த ஆசிரியர், அந்த மாணவனிடமிருந்து செல்போனை பறித்துக் கொண்டார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.