காலி மருத்துவ இடங்களை நிரப்ப சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்த வேண்டும்.
-சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
மருத்துவ கல்லூரிகளில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சேர்க்கை முழுமையாக நிறைவடையவில்லை.
பல இடங்கள் இன்னும் காலியாக உள்ளது.
இதையடுத்து கவுன்சிலிங் முடிந்த பிறகு காலியாக உள்ள இடங்களை உடனே நிரப்ப வேண்டும் என லக்னோ மருத்துவ கல்லூரி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடைசி சுற்று கவுன்சிலிங் முடிந்த பிறகு காலி இடங்கள் இருந்தால் சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
அவர்கள் தங்கள் உத்தரவில் கூறி இருப்பதாவது:
நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாணவர்கள் சேர்க்கையை முழுமையாக நடத்தாமல் இருப்பது தவறு.
இதனால் இந்த மாதம் 30-ந்தேதிக்குள் மருத்துவக் கல்லூரிகளில் எத்தனை காலி இடங்கள் இருக்கிறதோ, அவற்றை உடனே நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதில் என்ன பிரச்சனை இருந்தாலும் அதனை தீர்த்து சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்தி அனைத்து மாணவர்கள் சேர்க்கை நடவடிக்கையும் முடிக்க வேண்டும்.
காலியாக உள்ள என்.ஆர்.ஐ. இடங்களை கூட பொதுப்பிரிவு கலந்தாய்வில் நிரப்பலாம்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.
காலியாகவுள்ள மருத்துவ இடங்களுக்கு கலந்தாய்வு.
நாடு முழுவதும் காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் ஆணை.
மாநில நிர்வாகம் நடத்தும் கலந்தாய்வு இன்றி நேரடியாக மருத்துவக் கல்லூரிகள் இடங்களை நிரப்பக் கூடாது.
என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் உள்ள இடங்கள் நிரம்பாவிடில் பொதுப்பட்டியலில் வைத்து கலந்தாய்வு நடத்த வேண்டும்.
டிச. 30ஆம் தேதிக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க நீதிபதிகள் ஆணை.
بحث هذه المدونة الإلكترونية
الاثنين، ديسمبر 23، 2024
Comments:0
Home
counseling
MBBS
காலி மருத்துவ இடங்களை நிரப்ப சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
காலி மருத்துவ இடங்களை நிரப்ப சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.