தலைமை ஆசிரியர்கள் பள்ளி கட்டுமான பணிகளை கண்காணிக்க வேண்டும் - Head teachers should monitor school construction work
விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் நடக்கும் கட்டுமான பணிகள் தரமாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க பொறுப்பு அலுவலராக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். பள்ளிக்கல்வித்துறையின் கனிமவளம், நபார்டு உள்ளிட்ட பல்வேறு முனையங்களில் பெறப்படும் நிதியை பொதுப்பணித்துறையின் சார்பில் நடக்கும் பள்ளி கட்டுமான பணிகளுக்காக ஒதுக்குகின்றனர். இந்த நிதியை ஒதுக்கி பல மாதங்கள் ஆகியும் பல இடங்களில் பொதுப்பணித்துறை பள்ளிகளுக்கான கட்டுமான பணிகளை துவங்காமலேஉள்ளது.
அப்படியே ஒதுக்கினாலும் அவற்றை தரமின்றி நடத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது.
தலைமை ஆசிரியர்கள் மூலமாக கட்டுமான பணிகளின் தரத்தை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுக்க வேண்டும். தரம் பற்றி தலைமை ஆசிரியரின் கருத்து அவசியமானது. அதற்கு மாவட்ட நிர்வாகம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதே போல் பராமரிப்பு, பழுது பணிக்கும் அதிகளவிலான நிதி ஒதுக்கப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தணிக்கை நடத்த வேண்டும். ஒதுக்கிய நிதி முழுதும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
பள்ளிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க கிராவல் கொட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது பல பள்ளிகளில் இன்னும் முடிவடையாமல் உள்ளது. டீசல் உள்ளிட்ட செலவுகளை தலைமை ஆசிரியர்களிடம் கேட்பதாக ஒரு புகார் உள்ளது.
மாவட்ட நிர்வாகம் கல்வி கற்றலில் காட்டும் அதே முக்கியத்துவத்தை பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் காட்ட வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.