செல்வமகள் சேமிப்பு திட்ட விதிகள் மாற்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 05, 2024

Comments:0

செல்வமகள் சேமிப்பு திட்ட விதிகள் மாற்றம்



செல்வமகள் சேமிப்பு திட்ட விதிகள் மாற்றம்:

சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம், பெண் குழந்தைகளின் நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்திய அரசால் தொடங்கப்பட்டது. பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான நிதிப் பாதுகாப்பை வழங்குவதற்காக இந்த சிறப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சூழலில் திட்டத்தின் (சுகன்யா சம்ரித்தி யோஜனா) பல விதிகளை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பொருளாதார அமைச்சகத்தால் புதிய வழிகாட்டுதல்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அனைத்து தபால் நிலையங்களும் இந்த வழிகாட்டுதல்களை (SSY கணக்கு) பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. 2 கணக்குகள் இருந்தால் உடனடியாக மூடப்படும்:

நிதி அமைச்சகத்தின் அறிவிப்பின் படி, புதிய வழிகாட்டுதல் அனைத்து வகையான சிறு சேமிப்பு திட்டங்களுக்கும் பொருந்தும். இந்த சூழ்நிலையில் சுகன்யா சம்ரித்தி கணக்கில் முதலீடு செய்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த புதிய விதிகளை அறிந்திருக்க வேண்டும். இந்தப் புதிய வழிகாட்டுதல்களின்படி, பெண் குழந்தையின் தாத்தா அல்லது பாட்டி தனது பேத்திக்காக செல்வ மகள் கணக்கைத் திறந்திருந்தால், அந்தக் கணக்குகள் பேத்தியின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் பெயருக்கு மாற்றப்பட வேண்டும். ஒருவேளை ஒரே விவரங்களுடன் இரண்டு செல்வ மகள் திட்ட கணக்குகள் தொடங்கப்பட்டால், அது உடனடியாக மூடப்படும். அத்தகைய கணக்குகள் நெறிமுறையற்றதாக கருதப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பான் ஆதார் இணைப்பு கட்டாயம்:

மகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பான் மற்றும் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், அவர்களின் பான் மற்றும் ஆதார் எண்களை உடனடியாக எந்த தாமதமும் இன்றி சேகரித்து கணக்கு விவரங்களில் இணைக்க தபால் அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுபுதிய வழிகாட்டுதல்கள் குறித்து அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தெரிவிக்க தபால் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதியின்படி, நெறிமுறையற்ற மற்றும் ஒழுங்கற்ற செல்வமகள் திட்ட கணக்குகளை நிர்வகிக்கும் அதிகாரம் இனி நிதி அமைச்சகத்திடம் மட்டுமே இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், அத்தகைய கணக்குகள் தங்கள் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும். செல்வமகள் கணக்கிற்கு 8.2 சதவிகித வட்டி:

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், நீங்கள் வருடம் ஒன்றுக்கு 250 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். இந்த செல்வமகள் கணக்கிற்கு இந்த காலாண்டில் ஆண்டுக்கு 8.2 சதவிகிதம் வட்டியை ஈட்டுகிறது. பெண் பிள்ளைக்ளுக்கு 21 வயதாகும் போது இந்தக் கணக்கு முதிர்ச்சியடையும். இந்த செல்வமகள் திட்ட கணக்கில் இருந்து மகளுக்கு 18 வயது நிறைவடைந்தால் மட்டுமே மொத்த டெபாசிட்டில் 50% எடுக்க முடியும். இந்தக் கணக்கைத் திறக்க மகளின் பிறப்புச் சான்று தேவைப்படும். பெற்றோருக்கும் பான் கார்ட் மற்றும் ஆதார் அட்டை தேவைப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews