9 லட்சம் பட்டதாரிகள் எழுதிய யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியானது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 18, 2024

Comments:0

9 லட்சம் பட்டதாரிகள் எழுதிய யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியானது



9 லட்சம் பட்டதாரிகள் எழுதிய யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியானது

உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வின் முடிவுகள் இன்று (அக்.17) வெளியிடப்பட்டன. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இத்தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) 2 முறை நடத்தப்படும். அதன்படி இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல் கட்ட நெட் தகுதித் தேர்வு கடந்த ஜூன் 19ம் தேதி நடத்தப்பட்டது. ஆனால், இதில் முறைகேடுகள் நடைபெற்றது கண்டறியப்பட்டதை அடுத்து அந்த தேர்வை மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. அதன் பின் யுஜிசி நெட் மறுத்தேர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்பட்டது. இந்த தேர்வை சுமார் 9 லட்சம் பட்டதாரிகள் வரை எழுதினர். தொடர்ந்து விடைக்குறிப்பு வெளியிடப்பட்டு தேர்வர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி தேர்வு முடிவுகளை பட்டதாரிகள் ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். இது குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 எனும் உதவி மைய எண் அல்லது ugcnet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரி வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews