பள்ளிக்கு செல்லாத மகன் - விஷம் குடித்த தாய் மரணம்
தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அடுத்த அக்கநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஜோதிமணி, விவசாயி. இவரது மனைவி இசக்கியம்மாள் (35). இவர்களுக்கு 2 மகன்கள்.
இதில் 9ம் வகுப்பு படித்து வரும் 2வது மகன் பள்ளிக்கு சரியாக செல்வதில்லையாம். தாய் இசக்கியம்மாள் கண்டித்தும் கேட்கவில்லை. இதனால் மகனை மிரட்டுவதற்காக நான் செத்துப்போகிறேன் என்று கூறி இசக்கியம்மாள், கடந்த 23ம் தேதி விஷம் குடித்துள்ளார்.
இதில் மயங்கிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இசக்கியம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மகனை மிரட்டுவதற்காக விஷம் குடித்த தாய் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
بحث هذه المدونة الإلكترونية
الثلاثاء، سبتمبر 03، 2024
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.