நூடுல்ஸ் சாப்பிட்ட மாணவி மர்ம மரணம்..!
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதிக்கு அடுத்துள்ள அரியமங்கலத்தை சேர்ந்தவர் ஜான் ஜூடி மெயில்ஸ்.
இவரது மகள் தான் ஸ்டெபி ஜாக்குலின் மெயில்ஸ், திருச்சியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று இரவு மொபைல் போனில் ஆன்லைனில் பிரபல கம்பெணியின் நூடுல்ஸ் ஆர்டர் செய்துள்ளார்.
அடுத்த ஒரு சில நிமிடங்களில் வீட்டிற்கு நூடுல்ஸ் வந்துவிட்டது. இதனை விட்டிலையே செய்து சாப்பிட்டு விட்டு தூங்கியுள்ளார். இன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக மாணவியை எழுப்பிய போது எழுந்திருக்கவில்லை.
இதனையடுத்து அவர் தூக்கத்திலையே உயிரிழந்தது தெரியவந்தது.
இதனால் மாணவியின் பெற்றோர் அலறி துடித்து மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மாணவி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இது குறித்து அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.