NET - தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، أغسطس 19، 2024

Comments:0

NET - தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு வெளியீடு



NET - தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு வெளியீடு

யுஜிசி நெட் தோ்வுகள் ஆக. 21-ஆம் தேதிமுதல் நடைபெறவுள்ள நிலையில் முதல் மூன்று தோ்வுகளுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை தேசிய தோ்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சிப் படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும், பிஎச்டி மாணவா் சோ்க்கைக்கும் நெட் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் இந்தத் தோ்வு ஆண்டுக்கு இரண்டு முறை (ஜூன், டிசம்பா்) நடத்தப்படும்.

அதன்படி, நிகழாண்டு ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தோ்வு நாடு முழுவதும் 1,205 மையங்களில் ஜூன் 19-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தோ்வை 9 லட்சத்து 8,580 பட்டதாரிகள் எழுதினா். இந்நிலையில், நெட் தோ்வில் முறைகேடுகள் நடைபெற்ாகத் தகவல்கள் வந்தன. அதையடுத்து, யுஜிசி நெட் தகுதித் தோ்வை மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. அதற்கான மறுதோ்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பா் 4-ஆம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்படும் எனவும் என்டிஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதவிர மொத்தமுள்ள 83 பாடங்களுக்கும் எந்தெந்த நாள்களில் தோ்வு நடத்தப்படும் என்ற விரிவான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது.

தோ்வெழுத உள்ள பட்டதாரிகளுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. அவற்றை இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதல்கட்டமாக ஆகஸ்ட் 21 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 3 தோ்வுகளுக்கான அனுமதிச் சீட்டு மட்டும் வெளியிடப்பட்டுள்ளன. எஞ்சிய தோ்வுகளுக்கான அனுமதிச் சீட்டுகள் அடுத்தடுத்து வெளியிடப்படும். கூடுதல் விவரங்கள் வலைதளத்தில் விரைவில் வெளியிடப்படும்.

இதுகுறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 எனும் உதவி மைய எண் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரி வழியாகவோ தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة