*பாலியல் வன்கொடுமை : சிவராமன் நள்ளிரவில் கைது*
கிருஷ்ணகிரியில் 13 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், நாதகவில் முக்கிய பதவியில் இருந்த சிவராமன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். என்.சி.சி. முகாமில் பங்கேற்ற மாணவியை வன்கொடுமை செய்ததாக பெற்றோர் புகார் அளித்ததால், அவர் கோவையில் பதுங்கியிருந்தார்.
இதனையடுத்து, சிவராமனை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடந்து வந்த நிலையில், நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பாலியல் வழக்கில் தனியார் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் உள்ளிட்ட 7 பேர் கைது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.