கேரளா - புதிதாக மாற்றப்பட்ட பாடப்புத்தகங்களில் பாலின சமத்துவத்தை விளக்கும் கருத்துகள் & படங்கள்... Kerala - Concepts & Images Explaining Gender Equality in Newly Revised Textbooks...
கேரளாவில் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் கடந்த 3ம் தேதி திறக்கப்பட்டன. ஆரம்ப பள்ளி படிக்கும் மாணவர்களின் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டதை அடுத்து, புதிய பாடங்கள் அடங்கிய புத்தகங்கள் பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டன.
இதில், மூன்றாம் வகுப்பு பாடப் புத்தகத்தில், பாலின சமத்துவத்தை விளக்கும் கருத்துகள் இடம்பெற்று உள்ளன. அவற்றை தன் சமூக வலைதள பக்கத்தில் மாநில கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி பகிர்ந்தார்.
வீட்டு வேலைகளை பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் செய்ய வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், குழந்தைகளுக்கு வீட்டின் குடும்ப தலைவர் சமையல் செய்து தருவது போன்ற சித்திரங்கள் இடம் பெற்றுள்ளன. இது கேரள மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.