பட்டதாரி ஆசிரியர் பணி நியமனப் பட்டியல் வெளியிட உயர்நீதிமன்றம் தடை...
பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த பிப்ரவரி 4ம் தேதி நடந்தது. இந்த பணி நியமன தேர்வில் ஆங்கில பாட ஆசிரியருக்கான தேர்வில் 24 வினாக்கள் தவறாக இருப்பதால் இதற்கு மதிப்பெண் வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
எனவே, தற்போது வெளியிடப்பட்ட இறுதி விடை தாள் அடிப்படையில், பணி நியமன பட்டியல் வெளியிட தடை விதிக்க வேண்டும்.
வல்லுநர் குழுவை வைத்து ஆய்வு செய்து இறுதி விடை பட்டியல் வெளியிட உத்தரவிடவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரண்டு மனுக்கள் தாக்கல் ஆகி இருந்தது.
இந்த மனுக்ககளை விசாரித்த நீதிபதி மஞ்சுளா இறுதி பணி நியமன பட்டியல் வெளியிட இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.