TNPSC அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான துறைத் தேர்வுகள் (Departmentall Exam) தொடர்பாக சில ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தல்-சார்பு - தேசிய ஆசிரியர் சங்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 26, 2024

Comments:0

TNPSC அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான துறைத் தேர்வுகள் (Departmentall Exam) தொடர்பாக சில ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தல்-சார்பு - தேசிய ஆசிரியர் சங்கம்



TNPSC நடத்தும் துறைத்தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை கோரி ஆசிரியர் சங்கம் கடிதம்!

DEPT EXAM - TNPSC நடத்தும் துறைத்தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை கோரி, தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு கடிதம் !

பெறுநர்

24-05-2024

செயலாளர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், சென்னை.

பொருள்: TNPSC அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான துறைத் தேர்வுகள் (Departmentall Exam) தொடர்பாக சில ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தல்-சார்பு.

வணக்கம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் துறை தேர்வுகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் புத்தகங்களை பார்த்து எழுதும் விடையளிக்கும் பகுதி என இரு பிரிவாக நடத்தப்படுகிறது. அதற்கான புத்தகங்களும், அனைத்து ஆசிரியர்களுக்கும் கிடைக்கப்பெறுவதில்லை. மிகுந்த பணிச்சுமைக்கு இடையே முயற்சி எடுத்து தேர்வு எழுதும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான தேர்வு முடிவு Pass அல்லது Fail என்று மட்டுமே வெளியிடப்படுகிறது.

ி மதிப்பெண்கள் வருவதில்லை. எந்தப் பகுதியில் எவ்வளவு மதிப்பெண்கள் என்று தெரியாததால் இரண்டு பகுதிகளில் எந்தப் பகுதியில் தோற்றோம் எனத் தெரியாமல் தேர்வர்களுக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில் இனிவரும் காலங்களில் சற்று மாற்றம் ஏற்பட வேண்டும். எதிர்வரும் துறைத் தேர்வுகளுக்கான எமது சங்கத்தின் சார்பில் சில ஆலோசனைகள்:

1. மாணவர்களின் விடைத்தாள் நகல்களையே அரசு வழங்கும் பொழுது துறை தேர்வு விடைத்தாள் நகல்களையும் வழங்க தேர்வாணையம் முன்வர வேண்டும்.

2. மறு கூட்டலுக்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும் 3. எந்தப் பகுதியில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றோம் என்பது தனித்தனியாக வெளியிடப்பட வேண்டும்.

4. அனைத்து தாள்களையும் ஒரு மதிப்பெண் வினாக்களாகவே மாற்றுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

5. அனைத்து துறைத்தேர்வுகளுக்கான புத்தகங்கள் எளிதில் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்யவேண்டும்.

மேற்கொண்ட ஆலோசனைகளை மிக விரைவாக பரிசிலித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews