சென்னையில் 7 நாட்கள் போக்குவரத்து மாற்றம் - போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 08, 2024

Comments:0

சென்னையில் 7 நாட்கள் போக்குவரத்து மாற்றம் - போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு சென்னையில் 7 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு இன்று உட்பட போட்டி நடைபெறும் 7 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று ஐபிஎல் போட்டி நடக்கிறது. இதேபோல் ஏப்.23, 28, மே 1, 12 (பகல் ஆட்டம்) 24,26 ஆகிய தேதிகளிலும் போட்டிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி போட்டி நடைபெறும் தினங்களில் மாலை 5 முதல் இரவு 11 மணி வரையிலும் பகல் போட்டியின்போது மதியம் 1 முதல் இரவு 7 மணி வரையிலும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விக்டோரியா ஹாஸ்டல் (கெனால் ரோடு) சாலைக்கு பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. பெல்ஸ் சாலை தற்காலிக ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது. வாலாஜா சாலையிலிருந்து பெல்ஸ்சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அண்ணா சாலையில் இருந்து வாலாஜா சாலை வரும் எம், டி, வி ஆகிய எழுத்துக்கள் கொண்டவாகன நிறுத்த அனுமதி அட்டைகள்உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று தங்கள் வாகன நிறுத்தத்தை அடையலாம்.

இதேபோல் பி, ஆர் எழுத்துக்கள் கொண்ட அனுமதி பெற்ற வாகனங்கள் வாலாஜா சாலை வழியாக சென்று நிறுத்துமிடங்களை அடையலாம்.

விக்டோரியா சாலை:

காமராஜர் சாலை வழியாக போர் நினைவு சின்னம் மற்றும் காந்தி சிலை வழியாக வரும் வாகனங்கள் எம், டி, வி ஆகிய எழுத்துக்கள் கொண்ட அனுமதி பெற்ற வாகனங்கள் பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று வாகன நிறுத்துமிடத்தை அடையலாம்.

இதேபோல் இந்த வழியாக வரும் பி, ஆர் அனுமதி அட்டை வாகனங்கள் கண்ணகி சிலை, பாரதி சாலை, பெல்ஸ் சாலைமற்றும் வாலாஜா சாலை வழியாக சென்று நிறுத்தங்களை அடையலாம். உழைப்பாளர் சிலையிலிருந்து வாகனங்கள் வாலாஜா சாலை செல்ல அனுமதி இல்லை. போர் நினைவுச் சின்னம், காந்தி சிலை ஆகிய மார்க்கங்களில் வரும் அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள் காமராஜர் சாலை பொதுப்பணித் துறை அலுவலகம் எதிரே உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் நிறுத்தலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews