வாக்காளர் அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்க 12 ஆவணங்கள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு - 12 documents for voting without voter card - Election Commission Notification
வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? - 12 ஆவணங்களில் ஒன்று போதும்
ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்று போதும் மக்களவைத் தேர்தலில், வாக்காளர் அடையாள
அட்டை இல்லாதவர்கள் ஆதார், ரேஷன் அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி
வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பூத் ஸ்லிப் வழங்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம்
தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள
அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்காளர் எவரொருவரின் ஜனநாயக உரிமையும் மறுக்கப்பட்டுவிடக் கூடாது
என்பதால் தேர்தல் ஆணையம் கூடுதல் ஏற்பாடு செய்துள்ளது. வாக்காளர் அட்டையில்
வாக்காளரின் பெயரில் சிறு எழுத்துப்பிழைகள் இருந்தாலும் வாக்களிக்க அனுமதிக்க
வேண்டும். ஒருவேளை வாக்காளர் அட்டையில் உள்ள புகைப்படத்தில் மாற்றம் இருந்தால் வேறு
புகைப்பட ஆவணத்தை காண்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வாக்காளர் அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்க 12 ஆவணங்களை தேர்தல் ஆணையம்
அறிவித்துள்ளது.
அவை பின்வருமாறு:
1. ஆதார் அட்டை 2. பான் கார்டு 3. ரேஷன் அட்டை 4. வங்கி அல்லது அஞ்சல் பாஸ்புக் 5.
ஓட்டுநர் உரிமம் 6. பாஸ்போர்ட் 7. புகைப்படத்துடன் கூடிய பென்ஷன் ஆவணம் 8.
புகைப்படத்துடன் கூடிய மத்திய, மாநில அரசு ஊழியர் அடையாள அட்டை 9. எம்.பி.,
எம்எல்ஏ, எம்எல்சி அதிகாரப்பூர்வ அடையாள அட்டை 10. சமூக நீதித்துறையின் அங்கீகாரம்
பெற்ற மாற்றுத்திறனாளி சான்றிதழ் 11. மத்திய அரசின் வேலைவாய்ப்பு அடையாள அட்டை 12.
தொழிலாளர் அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட்
கார்டு
Search This Blog
Monday, April 08, 2024
Comments:0
Home
Election 2024
Tamil Nadu State Election Commission
voter ID LINK
voter list
வாக்காளர் அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்க 12 ஆவணங்கள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வாக்காளர் அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்க 12 ஆவணங்கள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.