பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை நிறைவு; மே 6ல் ரிசல்ட் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 21, 2024

Comments:0

பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை நிறைவு; மே 6ல் ரிசல்ட்



பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை நிறைவு; மே 6ல் ரிசல்ட் Plus 2 General Examination ends tomorrow; Result on May 6

பிளஸ் 2 பொது தேர்வுகள் நாளை(மார்ச் 22) நிறைவு பெறுகின்றன. மே 6ம் தேதி தேர்வு முடிவு வெளியாகிறது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, இந்த மாதம், 1ம் தேதி துவங்கியது.

முதலில் மொழி பாடங்களுக்கும், பின் முக்கிய பாடங்களுக்கும் தேர்வுகள் நடந்துள்ளன. இந்த ஆண்டு தமிழ் தேர்வு எளிதாகவும், ஆங்கிலம், இயற்பியல் தேர்வுகளின் வினாத்தாள்கள் கடினமாகவும் இருந்தன. பிளஸ் 2 மாணவர்களுக்கான இறுதி தேர்வு நாளை நடக்கிறது. உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், தொழிற்கல்வி இன்ஜினியரிங் பாடங்கள், அலுவலக மேலாண்மை உள்ளிட்டவற்றுக்கு, நாளை தேர்வு நடக்கிறது. இத்துடன், பிளஸ் 2 பொது தேர்வு நிறைவு பெறுகிறது.

பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு பணி வரும், 1ம் தேதி துவங்க உள்ளது. ஏப்., 13க்குள் மதிப்பீட்டு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மே 6ம் தேதி தேர்வு முடிவு வெளியாகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews