செய்திக்குறிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெறவுள்ள TNPSC Group IV (VAO) போட்டித்தேர்வுகளுக்கு கரூர் மாவட்ட மைய நூலகத்தில் மாதிரி தேர்வுகள் / வினாத்தாள் கலந்துரையாடல் சிறந்த வல்லுநர்களைக் கொண்டும், TNPSC தேர்வில் தற்போது வெற்றி பெற்றுள்ள சாதனையாளர்களை கொண்டும் இலவசமாக நடைபெற உள்ளது.
பயிற்சியின் சிறப்பு அம்சங்கள்:
1. பாடவாரியாக அலகுத்தேர்வுகள் / திருப்புதல் தேர்வு / முழுத்தேர்வு
2. பயிற்சித் தேர்வுகள் கொள்குறி முறையில் OMR தேர்வுத்தாளில் நடத்தப்படும்.
3. சிறந்த வல்லுநர்களைக் கொண்டு தேர்வு முடிவடைந்தபின், விடைத்தாள்களைக் கொண்டு கலந்துரையாடல் மற்றும் மாணவர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுதல், கருத்துக்களை பரிமாறிக் கொள்ளுதல்.
4. எளிய முறையில் கற்றுக்கொள்ளுதல் மற்றும் ஞாபகம் வைத்திருத்தல் ஆகியவற்றிற்கு எளிய வழிகளைக் கூறுதல். 5. தேர்விற்குத் தேவையான பாடங்கள் மற்றும் பகுதிகளைக் கண்டறிய வைக்கும் திறனை மேம்படுத்துதல்.
6. தேர்வுகளுக்கு ஏற்ப சமீபகால நிகழ்வுகளை (Current Affairs) கண்டறிந்து படிக்க வைத்தல்.
7. ஒவ்வொரு வாரமும், புதன்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை மாதிரித்தேர்வுகளும், மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை மாதிரித் தேர்வு வினாக்கள் குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
மேற்காணும் TNPSC Group IV (VAO) போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மையம்
மாதிரி தேர்வுகள்/ வினாத்தாள் கலந்துரையாடல் 20.01.2024 அன்று துவங்கப்பட்டு ஒவ்வொரு வாரம் புதன்கிழமை கரூர் மாவட்ட மைய நூலகம், குளித்தலை. கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி ஆகிய முழுநேர கிளை நூலகங்களில் நடைபெற உள்ளது.
இம்மாதிரி தேர்வுகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவ, மாணவியர்கள் 19.01.2024 ஆம் தேதிக்குள் மாவட்ட மைய நூலகத்தில் மற்றும் மேற்காணும் முழுநேர கிளை நூலகங்களில் தங்கள் பெயர் முகவரியை பதிவு செய்து மேற்படி இலவச மாதிரி தேர்வு மற்றும் வினாத்தாள் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்று பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.