தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சுற்றறிக்கை!
அரசாணை 243 நாளை மறுநாள் (Effect from 31.12.2023) நடைமுறைக்கு வந்து விடும். இவ்வரசாணையில் சொல்லப்பட்டுள்ள மாநில முன்னுரிமை என்பது தற்போது அனைவருக்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய Gift ஆகும். ஆனால் இதை பாதிப்பு என கருதும் சிலர் Courtக்கு போவதன் அடிப்படையில் தடை கிடைத்தால் மட்டுமே இவ்வரசாணையின் ஷரத்துக்கள் தடைபட வாய்ப்பு. ஆனால் 90 சதவீதம் நீதிமன்றத் தடை கிடைக்காது. ஏனெனில் அரசாங்கம் இதனை அரசின் கொள்கை முடிவு என நீதிமன்றத்தில் கூறிவிடும். இயக்கங்கள் தலையிட்டால் கூட நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு ஊட்டுப் பதவியாக (Feeder Category) பட்டதாரி ஆசிரியர் மட்டும்தான் என அரசாணையில் கூறப்பட்டுள்ளதை ரத்து செய்து, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு, பட்டதாரி ஆசிரயரோடு துவக்கப்பள்ளித் தலைமையாசிரியரையும் Feeder category ஆக சேர்க்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை மட்டும்தான் அரசிடம் வைக்க வாய்ப்புள்ளது. மேலும் தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு தற்போது அளிக்கப்பட்டுள்ள இம்மாநில முன்னுரிமையானது, நீதிமன்றம் அரசிற்கு கொடுத்துள்ள தீர்ப்பின் அடிப்டையில் எடுக்கப்பட்ட அரசின் முடிவு ஆகும். எனவே அதை நீதிமன்றங்களோ அல்லது இயக்கங்களோ தடை செய்ய சட்டப்படி முடியாது. மேலும் மாநில முன்னுரிமையானது, தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படுவதால், பல வருடம் பணிமூப்பை இழந்து ஒன்றிய மாறுதலாகி வந்தவர்களுக்கு, மாறிவந்த இடத்தில் தற்போது இழந்த முன்னுரிமையை பெற்று, உடனடியாக அவர்கள் துவக்க / நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெறலாம். தலைமையாசிரியராகவே எங்கு வேண்டுமானாலும் மாறிச் செல்லலாம். ஆகவே அரசாணை 243 மூலம் மாநில முன்னுரிமை என்ற மிகப்பெரிய Gift 2024ம் ஆண்டில் அனைத்து தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கும் கிடைத்துள்ளது என்பதே எனது கருத்தாகும்.
திரு.சா.ஜாண்சன்,
மாவட்ட செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றம்,
தூத்துக்குடி மாவட்டம்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.