குரூப் 1, 2 தேர்வு முடிவு பிப்ரவரிக்குள் வெளியீடு
குரூப் 1, 2 உள்ளிட்ட 15 தேர்வுகளின் முடிவுகள் பிப்ரவரி மாதத்திற்குள் வெளியிடப்படும் என TNPSC தேர்வுக் கட்டுபாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.
குரூப் 2, 2ஏ தேர்வில் 5,777 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்தேர்வு முடிவுகள் ஜன. 12-ல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், குரூப்1-ல் 95 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் பிப்ரவரியில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் நடத்தப்பட்ட 15 தேர்வுகளுக்கான முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு: 5,777 பணியிடங்களுக்கு சென்ற பிப்ரவரியில் நடைபெற்ற குரூப்-2 முதன்மைத் தேர்வு முடிவு ஜனவரி 12-ம் தேதி வெளியாகும். முன்பை 248 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும், குரூப்-1ஏ சேவைகளில் வரும் 9 உதவி வனக்காப்பாளர் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு முடிவும் இந்த மாதத்துக்குள் வெளியிடப்படும்.
இதேபோல், 95 குரூப் 1 பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு, 11 மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கான முதன்மைத் தேர்வு, சுற்றுலா அலுவலருக்கான எழுத்துத் தேர்வு, கால்நடை தடுப்பு மருத்துவ நிறுவன ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் மருந்து பரிசோதனை ஆய்வக இளநிலை ஆய்வாளர் பணிக்கான கணினி வழித்தேர்வு முடிவுகள் பிப்ரவரியில் வெளியாகும்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.