Fashion Technology Courses - பேஷன் டெக்னாலஜி படிப்புகளுக்கான மத்திய அரசு நிறுவனம் - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 3 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، ديسمبر 16، 2023

Comments:0

Fashion Technology Courses - பேஷன் டெக்னாலஜி படிப்புகளுக்கான மத்திய அரசு நிறுவனம் - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 3



பேஷன் டெக்னாலஜி படிப்புகளுக்கான மத்திய அரசு நிறுவனம் - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 3 Central Government Institute for Fashion Technology Courses – Last Date to Apply: 3rd January

பேஷன் டெக்னாலஜி படிப்புகளுக்கான மத்திய அரசு நிறுவனம்.

பேஷன் கல்வியை வழங்குவதன் வாயிலாக, ஜவுளி மற்றும் ஆடை துறையில் திறமையான மனிதவளத்தை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த 1986ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இக்கல்வி நிறுவனம், 2006ல் தன்னாட்சி அங்கீகாரம் பெற்றது.

கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள் வடிவமைப்பில், வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வழங்குகிறது.

கல்வி வளாகங்கள்:

பெங்களூரு, போபால், சென்னை, டாமன், காந்திநகர், ஹைதராபாத், கண்ணூர், கொல்கத்தா, மும்பை, புதுடில்லி, பாட்னா, பஞ்ச்குலா, ரேபரேலி, ஷில்லாங், காங்க்ரா, ஜோத்பூர், புபனேஷ்வர், ஸ்ரீநகர் ஆகிய 18 நகரங்களில் இக்கல்வி நிறுவன வளாகங்கள் செயல்படுகின்றன.

வழங்கப்படும் படிப்புகள்:

இளநிலை பட்டப்படிப்புகள் - 4 ஆண்டுகள்:

பி.டெஸ்., - பேஷன் கம்யூனிகேஷன்பி.டெஸ்., - ஆக்ஸசரி டிசைன்பி.டெஸ்., - பேஷன் டிசைன்பி.டெஸ்., - லெதர் டிசைன்பி.எப்.டி., - அப்பேரல் புரொடக்சன்பி.டெஸ்., - டெக்ஸ்டைல் டிசைன்பி.டெக்., - பேஷன் டெக்னாலஜி

முதுநிலை பட்டப்படிப்புகள் -

2 ஆண்டுகள்: எம்.டெஸ்., - மாஸ்டர் ஆப் டிசைன்எம்.எப்.எம்., - மாஸ்டர் ஆப் பேஷன் மேனேஜ்மெண்ட்எம்.எப்.டெக்.,- மாஸ்டர் ஆப் பேஷன் டெக்னாலஜி.

தேர்வு முறை:

தேசிய தேர்வு முகமை நடத்தும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு வாயிலாக இந்த கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கம்ப்யூட்டர் மற்றும் காகித அடிப்படையில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.

நாடு முழுதும் 60 நகரங்களில் நுழைவுத்தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்கும் முறை:

https://exams.nta.ac.in/NIFT/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 3

தேர்வு நடைபெறும் நாள்: பிப்ரவரி 5

விபரங்களுக்கு:

https://nift.ac.in/ மற்றும் https://nta.ac.in/

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة