கூட்டுறவு உதவியாளர்‌ தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، ديسمبر 19، 2023

Comments:0

கூட்டுறவு உதவியாளர்‌ தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு!

Release of Admit Card for Cooperative Assistant Exam! - கூட்டுறவு உதவியாளர்‌ தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு!



கூட்டுறவு உதவியாளர்‌ தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு!

கூட்டுறவு உதவியாளர்‌ தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம்‌ செய்யலாம்‌ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுச்‌ சங்கங்களின்‌ பதிவாளர்‌ கட்டுப்பாட்டில்‌ செயல்படும் கூட்டுறவுச்‌ சங்கங்களில்‌ உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம்‌ மூலம்‌ நிரப்புவதற்காக மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால்‌ கடந்த நவ.10 ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது.  அதற்கான எழுத்துத்‌ தேர்வு டிச. 24 ஆம் தேதி தொன் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கொளத்தூர், ஸ்ரீகிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி, அண்ணா நகர், ஸ்ரீகிருஷ்ணசாமி மெட்ரிகுலேஷன் மேல் நிலை பள்ளி, அண்ணா நகர், ஸ்ரீகிருஷ்ணசாமி மெட்ரிகுலேஷன் மேல் நிலை பள்ளி, வில்லிவாக்கம், அரசினர் கலைக் கல்லூரி, நந்தனம், பச்சையப்பா கல்லூரி, சேத்துப்பட்டு ஆகிய 6 மையங்களில்‌ நடத்தப்படவுள்ளது. 

இத்தேர்விற்கான அனுமதி நுழைவுச்‌ சீட்டினை டிச. 18 ஆம் தேதி முதல்‌ மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் https://www.drbchn.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌ எனவும், கூடுதல்‌ விபரங்களுக்கு chennaidrb@gmail.com மின்னஞ்சல்‌ மற்றும்‌ 044-2461 6503, 044-2461 4289 தொலைபேசியை தொடர்பு கொள்ளலாம்‌ எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة