மாவட்ட தொடக்க கல்வி அலுவலக கட்டிட மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததால் அதிர்ச்சி சிவகங்கையில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலக கட்டிட மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததால் அலுவலர்கள் அலறியடித்து ஓடினர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் உள்ளது. கடந்த 1988 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடம் இன்று வரை பராமரிப்பு செய்யப்படாததால் திடீரென மேற்கூரையில் உள்ள மேற்பூச்சு இடிந்து விழுந்தது.
இந்த கட்டிடத்தில் புள்ளியல் துறை அலுவலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், வேளாண் பொறியியல் துறை அலுவலகம் மற்றும் தொடக்க கல்வி அலுவலகங்கள் உள்ளன. இதில் 300க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர் திடீரென மேற்பூச்சு இடிந்து விழுந்ததால் அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.