ஆன்லைன் பதிவு புறக்கணிப்பு: ஆசிரியர் கூட்டமைப்பு முடிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 10, 2023

Comments:0

ஆன்லைன் பதிவு புறக்கணிப்பு: ஆசிரியர் கூட்டமைப்பு முடிவு

ஆன்லைன் பதிவு புறக்கணிப்பு: ஆசிரியர் கூட்டமைப்பு முடிவு Online Enrollment Boycott: The Teachers' Federation Decision

தொடக்க பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான டிட்டோ ஜாக் சார்பில், தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பனுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்:

மாணவர்களின் கல்வித் தரத்தை பாதிக்கும், எண்ணும் எழுத்தும் திட்டம்; மொபைல் போன் செயலியில் தேர்வு நடத்தும் முறை ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என, வலியுறுத்தி வருகிறோம்.சென்னையில் நடந்த ஆசிரியர் தின விழாவில், ஆன்லைன் பதிவு பணிகளில் இருந்து ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவர் என, அமைச்சர் மகேஷ் அறிவித்தார். ஆனால், இன்றுவரை ஆன்லைன் பதிவேற்ற பணிகளில் இருந்து ஆசிரியர்கள் விடுவிக்கப்படவில்லை.ஆசிரியர்களின் கற்பித்தல் பணிக்கு இடையூறாக உள்ள ஆன்லைன் பதிவேற்ற பணிகளில் இருந்தும், எமிஸ் மற்றும் தமிழக பள்ளிக்கல்வி செயலியில் மேற்கொள்ளப்படும் பதிவேற்ற பணிகளில் இருந்தும், வரும், 16ம் தேதி முதல் ஆசிரியர்கள் தங்களை முழுமையாக விடுவித்து கொள்வர்.

மாணவர்கள், ஆசிரியர்கள் வருகை பதிவேற்றம் தவிர, பிற விபரங்களின் பதிவில் இருந்தும், ஆசிரியர்கள் விலகிக் கொள்வர். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் கூட்டமைப்பின் இந்த முடிவு, பள்ளிக்கல்வி துறையின் தொடக்க கல்வி பிரிவுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. ஒருங்கிணைந்த கல்வி திட்டமான, சமக்ர சிக் ஷா இயக்குனரகம் சார்ந்த ஆன்லைன் பணிகளும், ஸ்தம்பிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews