பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் - செய்தி வெளியீடு - நாள்: 11.10.2023 Builder can apply for subsidized loan to set up Coffee Stand - Press Release - Date: 11.10.2023
செய்தி வெளியிட்டு எண்:-193
செய்தி வெளியீடு
நாள்: 11.10.2023
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்கள் பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆப, அவர்கள் தெரிவித்துள்ளார்கள். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்படி இத்தொழிலை தொடங்க காலி இடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும் உரிமையாளர் கட்டணம் (Franchise Fees) ரூ.2.00 இலட்சம் முற்றிலுமாக விலக்கும். விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு வரை சிறப்பு 5% தள்ளுபடியும், பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்
மேலும் மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும்
இத்தொழிலினை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள் அந்நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும். 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்தொழிலுக்கு ரூ.6.50 இலட்சம் முதல் ரூ.7.50 இலட்சம் வரை திட்டத்தொகையினை நிர்ணயித்து இதற்கு ஆதிதிராவிடர்களுக்கு 30% அல்லது அதிகபட்சம் ரூ.2.25 இலட்சம் வரையும், பழங்குடியினருக்கு 50% அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம் வரையும் மானியமாக வழங்கப்படும். பயனாளி 5% முதல் 10% சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கியில் கடனுதவி பெற்றுக் கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி, ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.