காலியாக உள்ள 365 மருத்துவ இடங்கள்; கவுன்சிலிங் அனுமதி கோரும் தமிழகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 15, 2023

Comments:0

காலியாக உள்ள 365 மருத்துவ இடங்கள்; கவுன்சிலிங் அனுமதி கோரும் தமிழகம்

காலியாக உள்ள 365 மருத்துவ இடங்கள்; கவுன்சிலிங் அனுமதி கோரும் தமிழகம் 365 vacant medical posts; Tamil Nadu seeking permission for counselling

சென்னை மதுரை உள்ளிட்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ கல்லுாரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஆறு எம்.பி.பி.எஸ். இடங்கள் கடந்தாண்டு வீணாகின.

இந்தாண்டும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

2023 - 24ம் கல்வியாண்டிற்கான நான்கு சுற்று மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நிறைவடைந்தும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன.

தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லுாரிகளில் 86 எம்.பி.பி.எஸ். இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாமல் உள்ளன.

279 பி.டி.எஸ். இடங்கள் அகில இந்திய, மாநில கவுன்சிலிங்கில் நிரம்பாமல் உள்ளன.

மொத்தமுள்ள 365 மருத்துவ இடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு அனுமதி அளிக்கும்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews