உலகக் கோப்பை செஸ் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 21, 2023

Comments:0

உலகக் கோப்பை செஸ் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா!

FIDE உலகக்கோப்பை 2023: அரையிறுதிப் போட்டியின் மூன்றாவது சுற்றில் அமெரிக்காவின் கருணா பேபியோனாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா

• உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார்

இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது

#BREAKING | உலகக் கோப்பை செஸ் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா!

அரையிறுதியில் உலகின் 3ம் நிலை வீரரான ஃபேபியானோவை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தல்

இறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை எதிர்கொள்கிறார்

Rapid game முறையில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா; 20 ஆண்டுகளுக்கு பின் உலகக்கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு இந்திய வீரர் முன்னேறியுள்ளார்

விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலகக் கோப்பை செஸ் அரையிறுதிக்கு முன்னேறிய 2ம் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றிருந்த நிலையில் தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

அசெர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் FIDE உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா புதிய சாதனை படைத்துள்ளார். அரையிறுதிப்போட்டியில் உலகின் 3ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி 18 வயதான பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

பரபரப்பான அரையிறுதிப் போட்டியின் முதல் இரண்டு சுற்றுக்களும் சமனில் முடிந்த நிலையில் 3ம் சுற்று போட்டி நடந்தது. டை பிரேக்கரில் 3.5 - 2.5 என்ற புள்ளிகள் முன்னிலையில் பிரக்ஞானந்தா உலகின் 3ம் நிலை வீரருக்கு அதிர்ச்சி அளித்தார்

முன்னதாக விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலகக் கோப்பை செஸ் அரையிறுதிக்கு முன்னேறிய 2ம் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றிருந்த நிலையில் தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews