Breaking

Friday, August 18, 2023

28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சென்னையில் பெண் செவிலியர்களுக்கான நேர்காணல்!

சவுதி அரேபிய அமைச்சத்தில் பெண் செவிலியர்களாக பணி செய்வதற்கான நேர்காணல் சென்னையில் நடைபெற உள்ளது.

இது தொடர்பான் முழு விவரங்களை இங்கே காணலாம்.

சவுதி அரேபியாவில் வேலை

தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.ந.மகேஸ்வரன் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நேர்காணல் நடைபெறுவதன் விவரம்

சவுதி அரேபிய அமைச்சகம் பெண் செவிலியர்களுக்கான நேர்காணலை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளது.

இதன்படி வருகிற 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய பெண் செவிலியர்களுக்கான நேர்காணல் நடைபெறுகிறது.

இதற்கான நேரம் மற்றும் இடம் தகவல் விரைவில் அறிவிக்கப்படும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இதற்கு விண்ணப்பிக்க - சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவத்துடன் பி.எஸ்.சி நர்சிங் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம்

இதற்கு விண்ணப்பிக்க 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். ஊதிய விவரம்:

இந்த பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலை அளிப்பவரால் வழங்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.com -  என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தொடர்பு எண்கள்

9566239685, 6379179200

044-22505886 - 044-22502267

இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.omcmanpower.com என்ற அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் வலைதளத்தில் தவறாமல் பதிவு செய்ய வேண்டும்.

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜென்ட்களோ கிடையாது என்று அறிவுறுத்தியுள்ளது.

விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog