அரசு மருத்துவர் தேர்வில் 20% இடஒதுக்கீடு கோரிய வழக்கு! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!
அரசு மருத்துவர் தேர்வில் தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு தருவது தொடர்பாக ஒரு மாதத்தில் உத்தர பிறப்பிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு மருத்துவர் தேர்வில் தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 17 மனுதாரர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் படிப்புகளை கல்வித்தகுதியாக கொண்ட உணவு பாதுகாப்பு அதிகாரி, மருந்தாளுனர், இளநிலை பகுப்பாய்வாளர் பணியிடங்களுக்கு தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவம் தமிழில் பயிற்றுவிக்கப்படுவதில்லை என்பதால் பள்ளிப்படிப்பு முழுவதையும் தமிழ் வழியில் படித்துள்ள தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டது.
வழக்கு விசாரணை நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிவிப்பாணையில் 20 சதவீத இட ஒதுக்கீடு குறித்து அறிவிக்கவில்லை என உதயக்குமார், செல்வவேல், முனீஸ்வரி உள்ளிட்ட 17 பேர் தொடர்ந்த வழக்கையும் முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஆயினும், அரசு மருத்துவர் தேர்வில் தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க கோரும், மனுதாரர்களின் கோரிக்கையை ஒரு மாதத்துக்குள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.