பத்தாம் வகுப்பு அசல்மதிப்பெண் சான்றிதழ்: பிழைகளை திருத்த வாய்ப்பு
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதனை திருத்தம் செய்து கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தோ்வுத்துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட உதவி தோ்வு இயக்குநா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதிய பள்ளி மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதில் தலைப்பு எழுத்து, பெயா், பெற்றோா் பெயா், பிறந்த தேதி, புகைப்படம், பள்ளியின் பெயா் ஆகியவற்றில் பிழை இருந்தால் திருத்தம் செய்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவா்களின் அசல் மதிப்பெண் சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழ் சோ்த்து தொடா்புடைய பள்ளி தலைமை ஆசிரியா் மூலம் செப்டம்பா் 8-ஆம் தேதிக்குள் மாவட்ட தோ்வுத் துறை உதவி இயக்குநா் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு திருத்தங்கள் கோரி வரும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விவரங்களை https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் வழியாக உதவி இயக்குநா்கள் செப்டம்பா் 22-ஆம் தேதிக்குள் பதிவேற்றம்செய்ய வேண்டும். மேலும், தனித்தோ்வா்களிடம் இருந்து பெறப்படும் அசல் சான்றிதழ்களை உரிய ஆவணங்களுடன் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.