பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்களின் பணியிட மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டுகோள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 22, 2023

Comments:0

பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்களின் பணியிட மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டுகோள்



பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்களின் பணியிட மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டுகோள்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்பதும் ஒரு அறிவிப்பு. ஆனால் அவர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு முழுமையாக நடத்தி முடிக்கப்படவில்லை.

இதுகுறித்து ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பழ.கௌதமன் கூறியதாவது

மாதம் 10,000 என்ற குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் மிக நீண்ட தொலைவு பயணம் செய்து பள்ளிக்கு செல்லும் சூழல் உள்ளது.வாங்கும் சம்பளத்தில் இதற்கே பாதி சம்பளம் செலவாகிறது.மீதி சம்பளத்தில் குடும்ப செலவுகளை கவனிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.எங்களுக்கு அருகாமை பள்ளிகளுக்கு மாறுதல் வழங்க வேண்டும் என அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.இந்நிலையில் கடந்த ஆண்டு ஜாக்டோ ஜியோ நடத்திய மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் அவர்கள் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்படும் என அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து ஓவியம் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது.ஆனால் இன்னொரு பிரிவினரான பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு இன்னும் நடத்தப்படவே இல்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.ஆனால் முதல்வர் அறிவித்த பணியிட மாறுதலை 10 மாதங்களுக்கு மேலாகியும் நடத்தாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.இதனால் 2000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர்.எனவே பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வை உடனே நடத்திட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews