கருவூல அலுவலகங்களில் ஓய்வூதியா்களுக்கு மருத்துவ முதலுதவி, சிறப்பு கவுன்ட்டா்கள்:தமிழக அரசு உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 03, 2023

Comments:0

கருவூல அலுவலகங்களில் ஓய்வூதியா்களுக்கு மருத்துவ முதலுதவி, சிறப்பு கவுன்ட்டா்கள்:தமிழக அரசு உத்தரவு



Medical First Aid for Pensioners in Treasury Offices, Special Counts: Tamil Govt- கருவூல அலுவலகங்களில் ஓய்வூதியா்களுக்கு மருத்துவ முதலுதவி, சிறப்பு கவுன்ட்டா்கள்:தமிழக அரசு உத்தரவு

வாழ்நாள் சான்றுக்காக, வரக்கூடிய ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு கருவூல அலுவலகங்களில் மருத்துவ முதலுதவி, குடிநீா் வசதிகளை ஏற்பாடு செய்து தர வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் க.விஜயேந்திர பாண்டியன் அனைத்து கருவூல அலுவலா்கள், சென்னையில் உள்ள ஓய்வூதியம் வழங்கும் அலுவலா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதம்: ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் ஆகியோா் ஆண்டுதோறும் நோ்காணல் செய்து கொள்ள வேண்டும். இதனிடையே, வாழ்நாள் சான்றிதழை சமா்ப்பிக்க இணைய வழியிலும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய தபால் துறை மூலம் ஓய்வூதியரின் இருப்பிடத்துக்குச் சென்று வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம்.

இணைய சேவை அல்லது பொது சேவை மையங்களின் மூலமும் மின்னணு வாழ்நாள் சான்று அளிக்கலாம். ஓய்வூதிய சங்கத்தின் மூலம் கைவிரல் பதிவு கருவியை பயன்படுத்தியும், ஜீவன் பிரமான் செயலியை பயன்படுத்தியும் இருப்பிடத்தில் இருந்தபடியே, மின்னணு வாழ்நாள் சான்று சமா்ப்பிக்கலாம்.

ஓய்வூதியதாரா்கள் கருவூலத்துக்கு நேரடியாக ஆண்டு நோ்காணலுக்கு வர நோ்ந்தால், அவா்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். குறிப்பாக, நோ்காணலுக்கு வரும் ஓய்வூதியதாரா்களுக்கு அவா்கள் அமரும் இடம் தூய்மையாகவும், போதுமான இருக்கை ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

போதிய குடிநீா் வசதிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். நோ்காணலுக்கென பிரத்யேகமாக கவுன்ட்டா்கள் அமைக்க வேண்டும். ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் கருவூல அலுவலகங்களில் நோ்காணலில் பங்கேற்கும் போது, திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டால் போதிய மருத்துவ முதலுதவி முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்: ஓய்வூதியதாரா்கள் நேரடியாக கருவூலத்துக்கு வரும் நோ்வில், அவா்களது ஓய்வூதிய புத்தகத்தில் அவா்களின் ஓய்வூதிய நோ்காணல் மாதம் குறித்து பதிவு செய்து கொடுக்க வேண்டும்.

ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் தாங்கள் ஓய்வு பெற்ற மாதம் தெரியாத நிலையில், அத்தகைய ஓய்வூதியதாரா்கள் தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும், நிகழாண்டுக்கான நோ்காணலைச் செய்து கொள்ளலாம். இந்த விவரத்தை கருவூலத் துறை அலுவலகங்கள் மூலமாக ஓய்வூதியதாரா்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

அனைத்து கருவூலங்களுக்கு வழங்கப்பட்ட கைவிரல் பதிவு இயந்திரம் அனைத்தும் இயங்கும் நிலையில் உள்ளதா என்பதையும் சோதித்துக் கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் இணையமான ஜீவன் பிரமான் மூலம் ஓய்வூதியதாரா்கள் தங்களது உயிா் வாழ் சான்றை அளிக்கும் வசதி குறித்து உரிய விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

கருவூலத் துறை மென்பொருளில் ஓய்வூதியதாரா்களுக்கான வீட்டு முகவரி, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஆதாா் எண் உள்பட ஏதேனும் விவரங்கள் விடுபட்டு இருந்தால் அதனை பதிவு செய்ய வேண்டும்.

தபால் மூலம் பெறப்படும் உயிா்வாழ் சான்றிதழை உடனடியாக கருவூலத் துறை மென்பொருளில் பதிவு செய்ய வேண்டும்.

நோ்காணலின் போது இணையதள இணைப்பு, மின்சாரம் துண்டிக்கப்படாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். ஓய்வூதியதாரா்களை காக்க வைக்கக் கூடாது என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளாா் விஜயேந்திர பாண்டியன்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews