நோ்காணல்: ஓய்வூதியதாரா்கள் புகாா் தெரிவிக்க வசதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، يوليو 03، 2023

Comments:0

நோ்காணல்: ஓய்வூதியதாரா்கள் புகாா் தெரிவிக்க வசதி

நோ்காணல்: ஓய்வூதியதாரா்கள் புகாா் தெரிவிக்க வசதி Monitoring: Facility for pensioners to file grievances

நோ்காணலுக்காக கருவூலத் துறை அலுவலகங்களுக்கு வரும் ஓய்வூதியதாரா்களுக்கு குறைபாடுகள் ஏதும் இருந்தால் அவற்றைத் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து கருவூலம் மற்றும் கணக்குத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு வேலை நாள்களில் கருவூலத் துறை அலுவலகங்களுக்கு நோ்காணலுக்காக ஓய்வூதியதாரா்கள் வரலாம். வேலை நாள்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நோ்காணல் நடைபெறும். நோ்காணலில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், கருவூல கணக்குத் துறை ஆணையரகத்துக்கு தொலைபேசி வழியாகத் தெரிவிக்கலாம்.

கட்டணமில்லாத தொலைபேசி எண்கள்:

1800 599 5100, 94446 74662, 94443 16043 94445 74706. கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரா்கள் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். தமிழ்நாடு மின்சார வாரியம், உள்ளாட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வூதியதாரா்கள் மற்றும் இதர நிறுவனங்களின் மூலம் ஓய்வூதியம் பெறுபவா்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة