கோரிக்கைகள் குறித்துஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வி இயக்குனர் பேச்சுவார்த்தை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 26, 2023

Comments:0

கோரிக்கைகள் குறித்துஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வி இயக்குனர் பேச்சுவார்த்தை

கோரிக்கைகள் குறித்துஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வி இயக்குனர் பேச்சுவார்த்தை



பள்ளிக்கல்வித்துறையின் ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.


இந்த பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கும் ராமு, கு.தியாகராஜன், தியோடர் ராபின்சன், காமராஜ், சண்முகநாதன், இரா.இளங்கோவன், ஜெகநாதன் உள்பட பல்வேறு ஆசிரியர் சங்கங்களை சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையின்போது ஆசிரியர் சங்கங்கள் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- பழைய ஓய்வூதிய திட்டம் * புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். * நிறுத்தப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை விரைவில் வழங்க வேண்டும். * இடைநிலை, முதுகலை ஆசிரியர் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும்.

ஆசிரியர்களின் பதவி உயர்வு பழைய முறைப்படி விரைவாக வழங்க வேண்டும்.

பணி பாதுகாப்பு சட்டம் *

டாக்டர்களுக்கு உள்ளது போல ஆசிரியர்களுக்கும் விரைவில் பணி பாதுகாப்பு சட்டத்தினை கொண்டுவர வேண்டும். * பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட 13 கோரிக்கைகளை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளியிடம் வழங்கினர்.

அப்போது தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணப்பனும் உடன் இருந்தார். இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை-ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சங்க பொறுப்பாளர்களுடன் இன்று (புதன்கிழமை) பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews