தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் முதுநிலைப் பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை (2023 2025) - விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 10.07.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 01, 2023

Comments:0

தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் முதுநிலைப் பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை (2023 2025) - விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 10.07.2023

Application form - Tamil Nadu Institute of Archaeology and Museology - PGDA / PGDE / PDHMM - (2023-2025) - PDF

CLICK HERE TO DOWNLOAD PDF

Tamil Nadu Institute of Archeology and Museology Admissions for Post Graduate Degree Courses (2023 2025) - Last Date for Receipt of Application: 10.07.2023

தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் முதுநிலைப் பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை (2023 2025)

2023 - 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான ஈராண்டு கால முழுநேர முதுநிலைப் பட்டயப் படிப்பு (Post Graduate Diploma Courses) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்று மொழி:

தமிழ் மற்றும் ஆங்கிலம். பயிலுதவித் தொகை: ஒவ்வொரு மாணவருக்கும் மாதந்தோறும் ரூ.5,000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) பயிலுதவித் தொகை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

கீழ்க்காணும் பாடங்களில் இருந்து 100 பல்கொள்குறி வினாக்கள் (Multiple Choice Questions) கொண்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தமிழ் இலக்கியம், வரலாறு, தொல்லியல், அண்மைக்கால தொல்லியல் அகழாய்வுகள் (தமிழ்நாடு (ம) இந்தியா), கல்வெட்டியல், கட்டடக்கலை, சிற்பக்கலை, நாணயவியல், அருங்காட்சியகவியல், வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல்.

எழுத்துத் தேர்வு நாள் :

23.07.2023 (ஞாயிற்றுக்கிழமை), முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை

எழுத்துத் தேர்வு மையங்கள்:

சென்னை, விழுப்புரம், சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தொல்லியல் துறை வலைதளத்தின் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம் (www.tnarch.gov.in). மூலமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை கல்விச்சான்றிதழ்கள் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் இணைத்து முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் (மு.கூ.பொ), தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை-600 008 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

தொலைபேசி எண்: 044-28190023.

மின்னஞ்சல் முகவரி: tnlam2325@gmail.com

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 10.07.2023 மாலை 5.00 மணி வரை

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews