திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! - மாவட்ட ஆட்சித்தலைவர் முக்கிய அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 04, 2023

Comments:0

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! - மாவட்ட ஆட்சித்தலைவர் முக்கிய அறிவிப்பு

செய்தி வெளியீடு

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருகின்றனர். பௌர்ணமி மற்றும் கார்த்திகை தீபம் போன்ற நாட்களில் லட்சகணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

தற்போது, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலுக்கு அருகே 365 நாட்கள் பலன் கொண்டது எனத் தெரிவித்து பஞ்சினால் செய்யப்பட்டு மேற்புறம் நெய் தடவிய மஞ்சள் நிற உருண்டையான விளக்கு விற்பனை செய்யப்பட்டு, திருக்கோயில் அருகே ஏற்றப்படுகிறது. இந்த விளக்கு எளிதில் அணையாமல் சுற்றுச்சுழலுக்கு மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்துவதுடன் எளிதில் தீ விபத்தினை ஏற்படுத்தும் வாய்ப்பினையும் ஏற்படுத்தும். அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் வளாகம் அருகே 365 நாட்கள் பலன் கொண்டது எனத் தெரிவித்து பஞ்சினால் செய்யப்பட்டு மேற்புறம் நெய் தடவிய மஞ்சள் நிற உருண்டையான விளக்கினை விற்பனை செய்யவும், திருக்கோயில் அருகே ஏற்றவும் மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விளக்கினை விற்பனை செய்யும் கடைகள் தொடர்ந்து செயல்பட தடை விதிக்கப்படுவதுடன் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது காவல் துறை வாயிலாக வழக்கும் பதிவு செய்யப்படும். விளக்கினை ஏற்றுபவர்கள் மீது அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சித்தலைவர், திருவண்ணாமலை.
IMG_20230504_214140

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84620089