கருணாநிதி பிறந்த நாளில் சத்துணவில் சர்க்கரைப் பொங்கல் - அரசாணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 16, 2023

Comments:0

கருணாநிதி பிறந்த நாளில் சத்துணவில் சர்க்கரைப் பொங்கல் - அரசாணை வெளியீடு

கருணாநிதி பிறந்த நாளில் சத்துணவில் சர்க்கரைப் பொங்கல் - அரசாணை வெளியீடு - Sugar Pongal in Satthuna on the birthday of Karunanidhi - Ordinance issued

சென்னை, மே 15: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி சத்துணவு மையங்க ளில் குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்க அர சாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தை களுக்கு காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெ.ஜெயல லிதா ஆகியோரின் பிறந்த நாளன்று சர்க்கரைப் பொங் கல் வழங்கப்படுவதுபோல் இனி வரும் காலங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளன்றும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படும் என கடந்த ஏப்.14- ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு பிறப் பித்துள்ள அரசாணையில், குழந்தைகள் மையங்களில் சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது குழந்தைகளுக்கு கருணாநிதி பிறந்தநாளன்று சர்க் கரைப் பொங்கல் வழங்கப்படும். குழந்தைகள் மையங்கள், சத்துணவு மையங்களில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு, நாள்தோறும் சத் துணவுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அரிசியின் அள வில் அரிசியைப் பயன்படுத்தவும், பொங்கல் வழங்க தேவைப்படும் வெல்லத்தை அங்கன்வாடிப் பணியாளர் கள், சத்துணவு அமைப்பாளர்கள் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படும் நாளின் உணவூட்டுச் செலவுக்குள் (எரி பொருள் நீங்கலாக) வாங்குவதற்கும் அனுமதி அளிக்கப் படுகிறது.

இந்த அரசாணையைச் செயல்படுத்த வட்டாரங்க ளில் உள்ள சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு உடன டியாக தக்க அறிவுரை வழங்கும்படி சென்னை மாநக ராட்சி, முதன்மைச் செயலாளர், ஆணையர், ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் இயக்குநர் மற்றும் குழும இயக்குநர், சமூக நல இயக்குநர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட் டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


CLICK HERE TO DOWNLOAD G.O OFFICIAL PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews