தேர்ச்சி விகிதம் குறைந்தது பற்றி குழு அமைத்து ஆய்வு செய்ய நடவடிக்கை புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கல்வி கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 19, 2023

Comments:0

தேர்ச்சி விகிதம் குறைந்தது பற்றி குழு அமைத்து ஆய்வு செய்ய நடவடிக்கை புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கல்வி கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி

புதுவையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி

*புதுவையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 89.12% பேர் தேர்ச்சி: அரசு பள்ளிகளில் 78.93% மாணவர்கள் தேர்ச்சி

*புதுவையில் கடந்த ஆண்டை விட 3.8% தேர்ச்சி விகிதம் குறைவு

புதுச்சேரி: 10ம் வகுப்பில் 89.12% தேர்ச்சி! புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 89.12 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தை விட இந்த ஆண்டு 3.8 சதவிகிதம் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை 10 மணியளவில் வெளியாகின. இதில், தமிழ்நாடு முழுவதும் 91.39% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டை காட்டிலும் 1.32% மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டும் மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 6.50 சதவீதம் தேர்ச்சி. மாணவிகள் 94.66 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.16 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 264 சிறைவாசிகளில் 112 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 42.42 சதவிகிதமாகும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews