TN 10th Public Exam - மே 5ல் முடிவுகள் வெளியாகிறது! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 06, 2023

Comments:0

TN 10th Public Exam - மே 5ல் முடிவுகள் வெளியாகிறது!

TN 10th Public Exam: 9.76 லட்சம் பேர் எழுதும் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்.. தயார் நிலையில் ஏற்பாடுகள்..! தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் செய்யப்பட்டுள்ளது.  

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் செய்யப்பட்டுள்ளது.  

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு இறுதிப்பருவத்தை எட்டியுள்ள நிலையில் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.  இதனை மாணவ - மாணவிகள் ஆர்வமுடன் எழுதி வருகின்றனர். முன்னதாக 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்வை சுமார் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 மாணவ-மாணவிகள் எழுதினர். இந்த தேர்வுகள் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதன்பின்னர் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கிய  11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று (ஏப்ரல் 5) ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனிடையே பெரிதும் எதிர்பார்க்கப்படும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகிறது. ஏப்ரல் 20 ஆம் தேதியுடன் நிறைவடையும் இந்த தேர்வுகளை தமிழ்நாட்டில்  4,66,765 மாணவர்களும், 4,55,960 மாணவிகளும் என மொத்தம் 9, 22, 725 பேர் எழுதுகின்றனர். இதேபோல் புதுச்சேரியில் 7,911 மாணவர்களும், மாணவிகள் 7,655 பேரும் என மொத்தம் 15, 566 பேர் எழுதுகின்றனர்.

அதேசமயம் தனித்தேர்வர்கள் பிரிவில் மாணவர்கள் 26,352 பேரும், மாணவிகள் 11, 441 பேரும், 5 திருநங்கைகள் என மொத்தம் 37,798 பேர் தேர்வு எழுதுகின்றனர். மேலும் 264  சிறைக்கைதிகள், மாற்றுத்திறனாளிகள் 13,151 பேரும் எழுதுகின்றனர். மொத்தமாக நடப்பாண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9,76,089 பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 4,025 மையங்களில் 12,639 தேர்வு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 10 ஆம் வகுப்பு செய்முறை தேர்வில் அதிகளவில் மாணவர்கள் வராத நிலையில் அதற்காக கால நீட்டிப்பு செய்யப்பட்டது. அந்த மாதிரி ஆப்சென்ட் நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்கவும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க தேர்வு மையங்களை கண்காணிக்கும் படை, முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இயங்கும் பறக்கும் படை என அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. அதேபோல் வினாத்தாள்கள் பலத்த பாதுகாப்புடன் தேர்வு மையத்திற்கு கொண்டு செல்லவும், விடைத்தாள் சேகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லவும் உரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது. 10 மணிக்கு புகைப்படம், பதிவெண்,  பாடம் முதலான விவரங்கள் கொண்ட முதன்மை விடைத்தாள்கள் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு அறையில் வழங்கப்படும். இவற்றை சரிபார்த்த பின் 10.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு தேர்வுகள் தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களை கண்காணிக்கவும், சோதனையில் ஈடுபடவும் 3,100 பறக்கும் படைகள்அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் 1,135 உள்ளனர். தேர்வு அறைகளில் கண்காணிப்பு பணியில் மட்டும் 46 ஆயிரத்து 870 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வு காலை 10 மணி அளவில் தொடங்கும். காலையில் தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக மாணவர்கள் விடைத்தாளில் தங்கள் குறிப்புகளை பதிவு செய்ய 5 நிமிடம், கேள்வித்தாளை படித்துப் பார்க்க 10 நிமிடம் என மொத்தம் 15 நிமிடம் ஒதுக்கப்படுகிறது. அதற்கு பிறகு விடை எழுதலாம். தேர்வு மையங்களுக்குள் மாணவர்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள். மேலும், தேர்வு மையங்களில் செல்போன், கணினி, கால்குலேட்டர் போன்றவை எடுத்து செல்ல தடை உள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபடுவார்கள். மேலும், மின் தடை வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத உள்ள மாணவ மாணவியருக்கான ஹால்டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் அச்சிடப்பட்டுள்ளது. தேர்வு நேரத்தில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் குற்றமாக கருதப்பட்டு அதற்கான தண்டனைகள் வழங்கப்படும்.

10ம் வகுப்பு தேர்வு பணியில், பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாற்றுத் திறனாளி மாணவர்கள் 13,151 பேருக்கு தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. டிஸ்லெக்சியா போன்ற குறைகள் உள்ள மாணவ-மாணவியர் சொல்வதை எழுத தனி நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதும் மாணவர்கள், பொதுமக்கள் தங்கள் புகார்கள், கருத்துகளை தெரிவிக்க வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழு நேர தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு நேரங்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8மணி வரை இந்த கட்டுப்பாட்டு அறை இயங்கும். புகார் தெரிவிக்க விரும்புவோர் 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews