வெப்ப அலை எதிரொலி: கோவாவில் பள்ளிகள் பிற்பகலுக்குப் பிறகு மூடப்படும்
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வெப்ப அலை எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, கோவா கல்வித் துறை இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) அன்று பள்ளிகளை நண்பகலுக்கு முன்பே மூட முடிவு செய்துள்ளது.
வெப்ப அலை எச்சரிக்கை காரணமாக கல்வித்துறை இந்த முடிவை எடுத்ததாக கல்வி இயக்குனர் ஷைலேஷ் ஜிங்காடே தெரிவித்தார். மாணவர்கள் பள்ளியிலிருந்து மதியத்திற்குள் வெளியேற அனுமதிக்குமாறு நாங்கள் பள்ளிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம் என்றார். வடக்கு மற்றும் தெற்கு கோவாவில் அதிகமாக வெப்பநிலை நிலவக்கூடும். மார்ச் 11 முதல் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி வரை குறைய வாய்ப்புள்ள நிலையில் கோவாவில் அதிகபட்ச வெப்பநிலை அதன் இயல்பை விட 4-6 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய பகல்நேர வெப்பநிலை 38.4 டிகிரி செல்சியஸாக இருந்தது, இது சராசரியை விட 4.6 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.
இருப்பினும், பல பள்ளிகள் தேர்வுகளை நடத்துவதால், தேர்வுகளின் நேரத்தை முன்கூட்டியே அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.