ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நான்கு மாணவிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்ப - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 15, 2023

Comments:0

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நான்கு மாணவிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்ப

Condolences and financial assistance to the families of the four girl students who drowned in the river - M.K. Stalin's announcement செய்தி வெளியீடு எண்: 310

நாள்: 15.02.2023

கரூர் மாவட்டம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நான்கு மாணவிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி- மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மாவட்டம், பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவிகள் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கால்பந்து விளையாட்டில் கலந்துகொண்ட பின்னர் இன்று 15.2.2023 காலை கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மாயனூர் கிராமத்தில் செல்லாண்டியம்மன் கோவில் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, சோபியா தபெ.வெள்ளைச்சாமி (7ம் வகுப்பு), தமிழரசி தபெ ராஜ்குமார் (8ம் வகுப்பு), இனியா த.பெ.மோகன்குமார் (6ம் வகுப்பு) மற்றும் லாவண்யா தபெ பெரியண்ணன் (6ம் வகுப்பு) ஆகிய நான்கு மாணவிகள் எதிர்பாராதவிதமாக சுழலில் சிக்கி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews