தேனியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்& செயற்கை கால் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் இதில் பங்கேற்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، يناير 19، 2023

Comments:0

தேனியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்& செயற்கை கால் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் இதில் பங்கேற்கலாம்

தேனியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்& செயற்கை கால் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் இதில் பங்கேற்கலாம் Private employment camp in Theni tomorrow & PWDs needing artificial leg can participate in it

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நாளை காலை 10 மணியளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். எனவே, 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ள வகுப்புகள் படித்தவர்கள், பிளஸ்-2, ஐ.டி.ஐ., பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் முகாமில் பங்கேற்கலாம். முகாமிற்கு வருபவர்கள் தங்களின் சுயவிவர நகல், கல்விச்சான்றிதழ்களின் நகல்களுடன் பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கால்களை இழந்த 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கும் வகையில், சென்னையை சேர்ந்த தன்னார்வ நிறுவனம் மூலம் மருத்துவ அளவீட்டு முகாம், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நாளை மறுநாள் சனிக்கிழமை நடக்கிறது

செயற்கை கால் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் இதில் பங்கேற்கலாம். தங்களின் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை நகல், 2 புகைப்படம், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة