10 தற்காலிக செவிலியர் பணியிடங்கள் - விண்ணப்பிக்க 27/01/2023 கடைசி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، يناير 19، 2023

Comments:0

10 தற்காலிக செவிலியர் பணியிடங்கள் - விண்ணப்பிக்க 27/01/2023 கடைசி

தென்காசியில் தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!10 Temporary Nurse Vacancies - Last to apply 27/01/2023

தென்காசி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 தற்காலிக செவிலியர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது - தென்காசி மாவட்டம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கீழ்கண்ட பதவியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 27/01/2023 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் - செவிலியர் (Staff Nurse), பதவியிடங்களின் எண்ணிக்கை - 10, கல்வித்தகுதி - செவிலியர் பட்டயபடிப்பு (DGNM)அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.sc Nursing) இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தின் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் படித்துள்ளவர்கள். வயது - 50 வயது வரை, மாத ஊதியம் - ரூ.18,000/-. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்பட மாட்டாது. கோவிட் - 19 காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கோவிட் -19 காலத்தில் தனியார் கோவிட் மருத்துவமனையில் பணிபுரிந்தவர்கள் அனுபவ சான்றிதழ் இணை இயக்குநர் சான்றொப்பத்துடன் சமர்ப்பிக்கவும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தென்காசி மாவட்டம் என்ற முகவரிக்கு வரும் 27ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப படிவங்கள் தென்காசி மாவட்ட(https://tenkasi.nic.in/notice_category/recruitment) வலைதளத்தில் வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது, என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة