அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிதிசார்ந்த பிரச்னைகள் - அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
பள்ளி கல்வித்துறை சார்ந்த 29 தேர்தல் வாக்குறுதிகளில் 22 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.
நாட்டின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை காமராசர் சாலையில் உள்ள மாநில சாரணர் இயக்குனரகத்தின் தலைமை அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தேசிய கொடி ஏற்றி மாியாதை செலுத்தினார்.
இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது, சாரணர் இயக்கத்தில் 10 லட்சம் மாணவர்களை இணைக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை நோக்கி பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கையில் புதிய அறிவிப்புகள் வெளியாகும். மதுரை கலைஞர் நூலகம் கட்டுமான பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இதற்கான திறப்பு விழா குறித்த விவரங்களை தமிழக அரசு விரைவில் அறிவிக்கும். நமது நிதிநிலையை சரிசெய்யும் பணியில் முதல்வர் ஈடுபட்டுள்ளார். பள்ளி கல்வித்துறை சார்ந்த 29 தேர்தல் வாக்குறுதிகளில் 22 நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிதிசார்ந்த பிரச்னைகள் மட்டுமே நிறைவேற்றப்படாமல் உள்ளது.
தற்போது காலை உணவு திட்டம் 1,545 பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக 500 பள்ளிகளில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் காலை உணவுதிட்டம் கொண்டுவரப்படும். சென்னையில் ஜி20 கல்வி கருத்தரங்கில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொள்ளும்போது, தேசிய கல்வி கொள்கையில் தமிழக அரசுக்கு இருகக்கூடிய ஆட்சேபனைகள் குறித்து தெரிவிக்கப்படும் என்றார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.