கடிதம் எழுதிய 5ம் வகுப்பு மாணவி - நேரில் ஆசையை நிறைவேற்றிய கலெக்டர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، يناير 27، 2023

Comments:0

கடிதம் எழுதிய 5ம் வகுப்பு மாணவி - நேரில் ஆசையை நிறைவேற்றிய கலெக்டர்

கடிதம் எழுதிய 5ம் வகுப்பு மாணவி - நேரில் ஆசையை நிறைவேற்றிய கலெக்டர் The 5th class student who wrote the letter - the collector who fulfilled her wish in person

ராமநாதபுரத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், 5-ஆம் வகுப்பு மாணவி, மாவட்ட ஆட்சியரை சந்தித்து பரிசு பெற்றார். பாப்பநத்தம் கிராமத்தில் 5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஜான்சி ராணிக்கு, ராமநாதபுரத்தில் ஆட்சியர் கலந்து கொள்ளும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களை நேரில் பார்க்க விரும்பினார். ஆனால், போதிய வசதி இல்லாததால், ஏற்பாடு செய்யுமாறு ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸுக்கு அவர் கடிதம் எழுதினார். அதனை தொடர்ந்து ஆட்சியரின் உத்தரவின்பேரில், ஜான்சி ராணியை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு, குடியரசு தின விழாவில் பங்கேற்க வைத்தனர். மாணவியின் ஆர்வத்தைப் பாராட்டிய ஆட்சியர், அவருக்கு பரிசுப்பொருளை அளித்து, வாழ்த்தி அனுப்பினார்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة