மாவட்டத்தில் பள்ளி செல்லா மாணவர்கள் : தொழிலாளர் நலத்துறையினர் விசாரணை
தமிழகத்தில் அனைவருக்கும் தரமான கல்வி வழங்கும் நோக்கில் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் கிராமப்புற பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைவாகவே உள்ளது.
அதே போன்று இம்மாவட்டத்தில் செயல்படும் செங்கல் சேம்பர் உட்பட பல்வேறு சிறு தொழில்களில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாகவே பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை இம்மாவட்டத்தில் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு 264 பேர் மீட்பு
கடந்த கல்வி ஆண்டில் பள்ளி செல்லாத, இடைநின்ற, கூத்தாடிகளாகவும், காலனி வீடுகள், செங்கல்சூளைகளில் தொழிலாளர் நலத்துறையுடன்இணைந்து கல்வித்துறை, குழந்தைகள் நலக்குழு, 'சைல்டு லைன்' உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் தேடுதல் நடத்தினர். எஸ்.புதுார், சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்புவனம் உட்பட 12 ஊராட்சி ஒன்றியங்களில் 264 பேர் பள்ளி செல்லாதவர்கள் என கண்டறிந்தனர். அவர்களை மாவட்ட நிர்வாகம் மீட்டு உரிய உதவிகளை செய்துள்ளது.
2023 ல் மீண்டும்தேடுதல் வேட்டை
இக்கல்வி ஆண்டிலும் பள்ளிகளுக்கு மாணவர்கள்வருகை குறைந்திருப்பதை அறிந்த கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தலைமையில் வயது 6 முதல் 18 க்கு உட்பட்ட பள்ளி செல்லாத, இடைநின்ற மாணவர், குழந்தை தொழிலாளர்களை மீட்டு பள்ளியில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன்படி தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் ஆர்.ராஜ்குமார் தலைமையில் குழுவினர் ஒன்றியம் வாரியாக கிராமங்களில் உள்ள செங்கல் சூளைகள்,காலனி வீடுகள், சிறு தொழில் நிறுவனங்களில் தேடுதலை துவக்கியுள்ளனர். ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக சென்று இப்பணிகளை மேற்கொண்டு பிப்.,9க்குள் முடித்து, அதற்கான அறிக்கையை கலெக்டரிடம் வழங்க திட்டமிட்டுள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.