மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து கேள்வி - ஸ்டாலின் அறிவுரை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 29, 2023

Comments:0

மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து கேள்வி - ஸ்டாலின் அறிவுரை

மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து கேள்வி - ஸ்டாலின் அறிவுரை

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என தி.மு.க., எம்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி துவங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டம் அக்கட்சி தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் எம்.பி.,க்களுக்கு ஸ்டாலின் வழங்கிய அறிவுரைகள்:

*இந்திய பங்குச்சந்தையில் அதானி குழுமத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்த விவாதங்களை முன் வைக்க வேண்டும்

*நீட் விலக்கு மசோதாவிற்கு பார்லிமென்டில் ஒப்புதல் பெற வேண்டும். ஜனாதிபதியின் ஒப்புதல் பெறுவது குறித்து விவாதிக்க வேண்டும்.

*மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதிய கடிதங்களின் நிலை குறித்து கேள்வி எழுப்ப வேண்டும்

*சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து பார்லிமென்டில் உறுதியான வாதங்களை முன்வைக்க வேண்டும்.

*துணை ஜனாதிபதி உள்ளிட்டோர் சிலர் தெரிவித்த தேவையற்ற கருத்து குறித்த விவாதங்களை எடுத்துரைக்க வேண்டும்.

*பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடை பற்றி விவாதம் நடத்த வேண்டும்.

*சிறுபான்மையினர் மாணவர்களுக்கு 1 முதல் 8ம் வகுப்பு வரை வழங்கி வந்த கல்வி உதவித் தொகையை நிறுத்தியது

*மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிப்பது

*மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது

*கால்நடைகளை கோமாரி நோயிலிருந்து தடுக்கும் தடுப்பூசிகளை பெறுவது

*தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது

*என்.எல்.சி. நிறுவனத்தின் வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது

*இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும் -, தேசிய அளவில் எதிரொலிக்கும் பிரச்னைகள் குறித்தும் பார்லிமென்டின் இரு அவைகளிலும் குரல் எழுப்ப வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews