தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் வேலை; நேர்காணல் நடைபெறும் தேதி : 30.01.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 23, 2023

Comments:0

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் வேலை; நேர்காணல் நடைபெறும் தேதி : 30.01.2023

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை. வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
 
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலை வாய்ப்பு
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 30.01.2023ல் நடைபெறும் நேர்காணல் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்: மருத்துவத்துறை வேலை வாய்ப்பு; 114 பணியிடங்கள்; டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிங்க!

Project Associate II

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : MSc Biotechnology / Microbiology /Animal Biotechnology / MVSc or Medicine படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 43,400

Skilled labour

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,240

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துக் கொள்ளலாம்.

முகவரி : Department of Veterinary Parasitology, Madras Veterinary College, Chennai-600 007.

நேர்காணல் நடைபெறும் தேதி : 30.01.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tanuvas.ac.in/admin/uploads/vacancies/1672915860.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews