பழைய பென்ஷன் திட்டத்துக்கு கைவிரிப்பு: மேலவையில் காங்கிரசார் வெளிநடப்பு... Old pension scheme waved: Congress walk out in upper house... - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، ديسمبر 30، 2022

Comments:0

பழைய பென்ஷன் திட்டத்துக்கு கைவிரிப்பு: மேலவையில் காங்கிரசார் வெளிநடப்பு... Old pension scheme waved: Congress walk out in upper house...

பழைய பென்ஷன் திட்டத்துக்கு கைவிரிப்பு: மேலவையில் காங்கிரசார் வெளிநடப்பு... Old pension scheme waved: Congress walk out in upper house...

பெலகாவி,-''கர்நாடகாவில் அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் அமல்படுத்தும் நோக்கம் தற்போதைக்கு இல்லை,'' என சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி தெரிவித்தார்.

பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் நடந்த குளிர்கால கூட்டத்தொடரில், சட்ட மேலவை காங்கிரஸ் உறுப்பினர் தளவார் சாபண்ணா, அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் முறை அமல்படுத்தும்படி கோரினார்.

முதல்வர் பசவராஜ் பொம்மை தரப்பில், சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி பதிலளித்து பேசியதாவது:

பழைய பென்ஷன் வழங்கும் திட்டத்தை, 2004ல் அப்போதைய காங்கிரஸ் அரசு தான் நிறுத்தியது.

கடந்த, 2006 முதல் அனைத்து மாநிலங்களும் அதை அமல்படுத்தின. அதன் பின் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

அப்போது முதல் புதிதாக அரசு வேலைக்கு சேருபவர்களுக்கும், மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. அதை மறந்து விட்டு மீண்டும் பழைய முறை கேட்பது சரியில்லை. கர்நாடக அரசு, ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் முதல், 80 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊதியம், பென்ஷனுக்கு செலவு செய்யப்படுகிறது.

மாதந்தோறும் பென்ஷனுக்கு மட்டுமே 24 கோடி ரூபாய் செலவாகிறது.

எனவே தற்போதைக்கு பழைய திட்டம் மீண்டும் அமல்படுத்தும் நோக்கம் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் பதிலை ஏற்க மறுத்த காங்கிரசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது.

அப்போது அரசின் பதிலை ஏற்க மாட்டோம் என்று கூறி, காங்கிரசார் வெளிநடப்பு செய்தனர்.

இதன் பின், அமைச்சர் மாதுசாமி மீண்டும் பேசுகையில், ''நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து பழைய பென்ஷன் முறை அமல்படுத்த முடியுமா என்பது குறித்து தீர்மானிக்கப்படும்,'' என்றார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة