கல்வி சுற்றுலா சென்ற பஸ் விபத்தில் சிக்கி ஆசிரியர் உள்பட 6 மாணவர்கள் பலி! 6 students, including the teacher, died in an accident on a bus that went on an educational trip! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، ديسمبر 21، 2022

Comments:0

கல்வி சுற்றுலா சென்ற பஸ் விபத்தில் சிக்கி ஆசிரியர் உள்பட 6 மாணவர்கள் பலி! 6 students, including the teacher, died in an accident on a bus that went on an educational trip!



கல்வி சுற்றுலா சென்ற பஸ் விபத்தில் சிக்கி ஆசிரியர் உள்பட 6 மாணவர்கள் பலி!- 6 students, including the teacher, died in an accident on a bus that went on an educational trip!

மணிப்பூரில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் ஆசிரியர் உள்பட 6 மாணவர்கள் பலியாகினர் மற்றும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

மணிப்பூரில் நோனி மாவட்டத்தில் இன்று பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் 6 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் பலியாகினர். பழைய கச்சார் சாலையில் பேருந்து திடீரென திருப்ப முயன்றபோது விபத்து ஏற்பட்டது.



இந்த விபத்தில் 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பின்னர் இறந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்தில் மேலும் 20 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.



தம்பால்னு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேருந்துகளில் நோனி மாவட்டத்தில் உள்ள கூப்பும் பகுதிக்கு ஆய்வுச் சுற்றுலா சென்றதாகவும், மாணவிகள் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة